Thursday, 31 July 2014

நிர்வாணம்...

திர்ஷயம் திரைப்படத்தின் கதையென்ன?

தான் அறியாத போது,தன் உடலை படமெடுத்த, ஒரு ஆணின் மிரட்டல் கண்டு பயந்த இளம்பெண், சந்தர்ப்ப வசத்தல், பதட்டத்தால் அந்த ஆணை கொலை செய்துவிடுகிறார்.

அந்தக் கொலையை அவளும் அவள் அம்மாவும் சேர்ந்து மறைக்கிறார்கள்.பின் அவள் தந்தையின் சாதுர்யத்தாலும் மதியூகத்தினாலும் சட்டத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

படத்தைப் பற்றிக் குறை கூறவில்லை.அது ஒரு நல்ல மசாலா படம்தான்.
ஆனால் இதையொட்டி எனக்கு தோன்றுவது இது.

இப்போது எல்லோருடைய கைகளிலும் மொபைல் கேமரா இருக்கிறது.எதை வேண்டுமானாலும் படமெடுக்கலாம்.யாரை வேண்டுமானாலும் படமெடுக்கலாம்.
ஒரு பெண்ணின் சிறிய அங்க வெளிப்பாடு கூட உடனே படமெடுக்கப்படுகிறது.இனி வரும் காலத்தில் இது நிச்சயமாக அதிகமாகும்.

இப்படி படமெடுப்பவர்களை எல்லாம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்தான். தடுக்கப் பட வேண்டும்தான்.

ஆனால் நம்முடைய நிர்வாணத்தை நம்மை அறியாமல் ஒருவன் படம்பிடித்து உலகத்துக்கு போட்டுக் காட்டினால் அது நமக்கு அவமானமா? அவமானம் என்றால் எப்படி அவமானம்?
”இவளப்பாரு இவள நாம நேத்து பாத்துட்டோம். இவளோட அது இப்படி? இது இப்படி? என்று யாராவது சொல்வார்களா?”

நிச்சயம் சொல்வார்கள்.

அனால் அப்படி சொல்வதற்கு படத்தில் இருந்தவர் பொறுப்பாவாரா? இல்லைதானே.

ரெஸ்ட் ரூமில் அவுத்துப் போட்டுட்டு குளிக்கும் போது யாரோ ஒருவன் படமெடுத்தால்,அதை உலகம் பார்த்தால்,அதைக் கிண்டலடித்தால் பிறருடைய அந்தரங்கத்தை எட்டிப்பார்த்த காரியத்துகாக,அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

”அதற்கு நான் எப்படி, ஏன் வெட்கபட வேண்டும். போடா லூசு” என்று சமூகத்தை நோக்கி,
கம்பீரமாக கேட்கும் மனநிலையை பெண் குழந்தைகளுக்கு உருவாக்கித் தரவேண்டியது பெற்றோர்களின் ஆசிரியர்களின் கடமை.

இதைப் பாடமாகவே கற்பிக்க வேண்டும். இதனால் பல தற்கொலைகள் குறையலாம்.
ராஜன்குறை கிருஷ்ணன் முன்பு ஒரு பதிவில் இந்த விழிப்பு சொல்லி இருக்கிறார். அதைப் படித்த பிறகுதான் எனக்கு இவ்விஷயத்தில் தெளிவு வந்தது.

எல்லா மதங்களிலும் சொல்லப்படும் ஒரே விசயம் பெண்ணின் உடலை மூடு என்பதுதான்.”அதை மூடு.இதை மூடு. மூடாட்டா இவன் கிளம்பிருவான். சமுதாயம் நாசமாயிரும்” என்பதுதான் இவை அனைத்தும் விடுக்கும் மொக்கை எச்சரிக்கை.
இது நாள் பட நாள் பட பெண்ணின் அங்கம் பற்றிய அதீத உணர்வாக அவள் மனதில் ஏற்றப்படுகிறது. எங்காவது எவனாவது பார்க்கிறானா? என்று பார்ப்பதும் பெண்ணுக்கு மன பாரமாக ஆகிவிடுகிறது.

இப்படி ஏற்றப்பட்டு ஏற்ற்ப்பட்டு என்றாவது நிர்வாணம் என்பது பலருக்கு தெரிய வரும் துரதிஷ்டம் நடக்கும் போது, அல்லது மிரட்டல் வரும் பொது,அது பற்றிய அளவுக்கதிமான ”கற்பனை அவமானத்தை” வளர்த்துக் கொண்டு பயந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அல்லது கொலை.

இது மாதிரியான ஒரு தெளிவு ”திரிஷ்யம்” படத்தின் மோகன்லால் மகள் கேரக்டருக்கு இருந்திருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாள்?

“போடா இண்டர்நெட் என்ன? போஸ்டர் அடிச்சி என் வீட்டு சுவத்துல கூட ஒட்டிக்கோ. என் அந்தரங்கத்த எட்டிப் பார்த்து படம் புடிச்சேன்னு உன் மேல கம்பளைன் கொடுப்பேன்.
இருக்கிற அமைப்புகள திரட்டிட்டு உன் வீட்டு வாசல்ல நின்னு குரல் கொடுப்பேன். ரோட்ட மறிச்சி போராட்டம் பண்ணுவேன். எனக்கு தெரியாம என்ன எடுத்த படத்துக்கு நான் பொறுப்பில்ல.

நீ எங்க வேணாலும் ஒட்டிக்க.யாருக்கு வேணாலும் எம்.எம்.எஸ் பண்ணிக்க.கல்யாணம் பண்ணிக்க யாரும் வரமாட்டாங்கன்னு மிரட்டாத. நா இந்த உலகத்துல மனித இனத்துல ஒரு வகை. என்னோட உணவு உறைவிடம் உடைய என்னால தேடிக்க முடியும். அதனால இனிமே உன் கூட எனக்கு பேச்சில்ல. வழிய மறிக்காத.தூரப்போ” என்று சொல்லி போயிருப்பாள்.

மோகன்லாலுக்கும் அவர் குடும்பத்துக்கும் சிரமமே இருந்திருக்காது.

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ezhil31 இது கமலி பன்னீர்செல்வம் எழுதியது இல்லை... நான் எழுதியதுதான்...நான் எழுதியதை அவர்கள் Courtesy என்று என் பெயர் போட்டு எழுதியிருந்தார்கள்... நீங்கள் கவனிக்கவில்லை போலும்... இது என்னுடைய சொந்த எழுத்து... அப்படி அடுத்தவர்களின் எழுத்துக்களை எடுத்து நான் எழுதுவதில்லை... அதில் எனக்கு விருப்பமும் இல்லை...

    ReplyDelete
  3. இனிமேல் முகநூலில் பதிவுகளை வாசிக்கும் போது கவனமாக வாசியுங்கள்... உங்கள் கமெண்ட் என்னை புண்படுத்துகிறது...

    ReplyDelete
  4. மன்னிக்கவும் நான் தான் கவனிக்கவில்லை போலும்....உங்களை வருத்தியமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. பொதுவாக நிறைய முக நூலில் வாசிப்பதால் பெரும்பாலும் பெயர்கள் நினைவிலிருக்காது. இந்தக் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்த போது என் நண்பர்களும் அவர் எழுதியதாகவே பேசியதால் இந்த தவறு நேர்ந்து விட்டது

    ReplyDelete
  6. உங்களின் மனதை புண்படுத்தியதை என் மன்னிப்பு கோரல் மாற்றிவிடாதென்றாலும் என்னால் முடிந்தது அது மட்டுமே. மேலும் இது போன்றதொரு நிகழ்வு யார் பதிவிலும் நடக்கா வண்ணம் இனி கவனமாயிருப்பேன்.

    ReplyDelete
  7. ezhil என் வார்த்தைகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...
    ஏதோ அந்த சமயத்தில் அப்படி தோன்றியது... பதட்டுப்பட்டுவிட்டேன்...

    ReplyDelete