Thursday, 27 June 2013

தீவிர இலக்கியமும் வேண்டும் ஃபேஸ்புக்கும் வேணுமாக்கும்...

லேட்டஸ்ட்டு காலச்சுவடு படிச்சியா?

இல்ல

லேட்டஸ்ட்டு தீராநதி படிச்சியா?

இல்ல.

கடைசியா படிச்ச தீவிர இலக்கிய சிறுகதை என்ன ?

இல்ல இப்ப கொஞ்ச நாள் படிக்கிறதில்ல.

கடைசியா படிச்ச ஆழமான கட்டுரை பத்தி சொல்லு?

இல்ல இப்ப கொஞ்சநாள் படிக்கிறதில்ல.

மரக்காணத்தில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

தெரியும்.ஆனா ஃபுல்லா தெரியாது.குண்டஸாட்த்தான் தெரியும்.

சரி.போன புக் எக்சிபிசன்ல குண்டு குண்டா புக்கு வாங்குனியே அதுல எதாவது படிச்சியா?

இல்ல. வாங்கினது அப்படித்தான் இருக்கு.

ஞாயிறு ஹிண்டு ஆர்டிக்கள வெட்டி பாக்கெட்ல வெச்சிகிட்டு, டாய்லட்டுக்கு போகும் போது கூட எடுத்து படிப்பியே அதெல்லாம்?

இல்ல இப்ப பண்றதில்ல.

லைப்ரரி போவியே அது?

அதுகெல்லாம் ஏது நேரம் பாஸ்.

அப்போ என்னதான் பண்ற?

ஃபேஸ்புக்ல இருக்கேன்.

அதுல என்ன பண்ற?

மனுஷ்யபுத்திரன் தாலி பத்தி ஒண்ணு சொல்லுவார்.அதப்பார்த்து கொதிப்பேன். அப்புறம் சாரு அன் கோ எதாவது காமெடி பண்ணும், அத படிச்சிட்டு சாரு விமர்சகர் வட்டத்த போய் பார்பேன். அவங்க கொடுக்கிற பதிலடிய படிப்பேன். அப்புறம் இவர் அவரப்பத்தி பேசுறத அவர் இவரப்பத்தி பேசுறத படிச்சி அதுக்கு பதில் சொல்லுவேன்.அடுத்து எதாவது வித்தியாசமா ஸ்டேட்டஸ் போடுறதுக்கு தலைய பிச்சிப்பேன். இது மாதிரி நேரம் எனக்கு போகுது பாஸ் இந்த ஃபேஸ்புக்கால.

சரி அப்ப இனிமேல் நீ அவ்வளவுதான்னு நினைக்கிறேன்? தீவிர இலக்கியமெல்லாம் உனக்கு சாத்தியமில்லை.

இல்ல பாஸ் நான் ஃபேஸ்புக்கையும் பாத்துகிட்டு,படிக்கவும் செய்துகிட்டு..

நிறுத்துடா டாபரு... முதல்ல் இந்த ரம்பரை ஊர்வசி மேனகை மாதிரியான ஃபேஸ்புக்கை விட்டு வெளிய வா. பழைய மாதிரி படி.வாசி.ஆழ்ந்து உழு. இவனுங்க சண்டையில நீ இலக்கியத்த இழந்துராத. இலக்கியம்ங்கிறது ஒரு இன்பம். இது மாதிரியான சில்லரை ஃபைட் இல்ல.

இல்ல என்னால ஃபேஸ்புக்க விட்டு வரமுடியாது பாஸ்.

நான் சொல்றத கேளுடா. ஃபேஸ்புக்க விட்டு வந்தாத்தான் இலக்கியம் படிக்க முடியும்.

இன்னொருதடவ ஃபேஸ்புக்க விட்டு வா. ஃபேஸ்புக்க விட்டு வான்னா ஒண்ண கொன்னுருவேண்டா. மரியாதை கொடுத்தா காப்பாத்திக்க... போடா. அட்வைஸ் பண்ண வந்துட்டான்...

கொலைவெறியில் அவன் கத்தினான்.

5 comments:

  1. அதானே..நமக்கு பேஸ்புக்தானே முக்கியம்.

    ReplyDelete
  2. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்..:)

    ReplyDelete
  3. ezhil உங்கள் ஃபேஸ்புக் அட்ரஸ் என்ன... நான் நட்பாக விரும்புகிறேன்...

    ReplyDelete
  4. புத்தகம் படிப்பது மட்டுமில்ல விஜய்,அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் மனம்விட்டு பேசியே ரெண்டு மாதமாச்சு(தீவிர முகநூல்வாதி ஆனதிலிருந்து!) எனவே ஒரே ஆப்ஷனாக முகநூல் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டேன்(ரெண்டு நாளாச்சு!)

    ReplyDelete