Monday, 3 June 2013

பொறாமையை கட்டுப்படுத்த ஒருவழி...

உலகிலேயே வெளியே சொல்ல முடியாத பகிர்ந்து கொள்ள முடியாத உணர்வு பொறாமைதான் என்பேன்.

காமத்தை கூட நண்பனிடம் பகிர்ந்துகொள்ளலாம்.”மச்சி எனக்கு இப்படித் தோணுதடா” என்று.

வக்கிரத்தை மனைவியிடம் சொல்லிவிடலாம் “சில சமயம் நமக்கு பிடித்த வயதானவர்களிடம் மிகப்பணிவாக பேசிக்கொண்டிருக்கும் போதே காலால் அவர்கள் நெஞ்சில் எத்தி ஒரு மிதி மிதிக்கனும் போல இருக்கே.இத வேற யாருகிட்டயும் சொல்ல முடியாது அதான் உன்கிட்ட சொல்றேன்” என்று படுக்கையறையில் விவாதிக்கலாம்.

ஆனால் பொறாமையை விவாதிக்கமுடியாத பயமும் அழுத்தமும் இப்போதைய மனிதனுக்கு பெரிய சவால்.பொறாமை என்பதை பொறாமைபடுவரின் மீது ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கும் தளத்திற்கு எடுத்துப்போகிறோம்.

“அவன் வீடு பால்காய்ப்புக்கு என்னக் கூப்பிட்டான்.எல்லாருக்கும் வீட்டை சுத்தி காமிச்சான்.எனக்கு காட்டவில்லை.என்ன மதிக்கல”

இப்படி சொல்வோம்.சின்னக் குற்றசாட்டை விரித்து பெரியதாக்கி கொள்ளுவது பிற்பாடு நடக்கும்.

என்னைக்கேட்டால் நாம் ஒருவர் மீது பொறாமை படுகிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.அதுவே அந்த பொறாமையை பாதி குறைத்துவிடும்.

“ஆமா அவன் மேல் எனக்கு பொறாமை இருக்கு.கோவம் மாதிரி துக்கம் மாதிரி பொறாமை ஒரு உணர்ச்சி.அவன் மேல எனக்கு இருக்கு” என்பதை மனதால் சொல்லி நம்புங்கள்.

பொறாமை கொடுக்கும் எதிர்மறை உணர்வு பாதியாக குறையும் பொறாமையை நாம் முதலில் நமுக்குள்ளே ஒப்புக்கொண்டால்.

ஆனால் தயவு செய்து வெளியே சொல்லிவிடாதீர்கள்.

உலகம் இன்னும் அந்த பக்குவம் அடையவில்லை..

2 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க. மனதைத் தொட்டது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. பொறாமை என்பது பசி,காமம்,பயம் போல ஆதிகாலத்து உணர்வெனவே தோன்றுகிறது… அதனாலயே அது வெல்வதற்கு அரியதாகவே உள்ளதென எண்ணுகிறேன்… கடைசி வரிதான் பஞ்ச்…!

    ReplyDelete