Monday, 17 June 2013

நாயன்மார்களில்

கொஞ்சம் பிரபலமாகத நாயன்மார்களில்( என்னளவில்) நாலைந்தை பார்ப்போம்...

எறிபத்தர் - சிவகாமியாண்டார் என்பவர் சிவபெருமானுக்காக கொய்து கொண்டு போகும் பூக்களை,புகழ் சோழனின் பட்டத்து யானை தன் துதிக்கையால் தட்டி விடுகிறது.

அங்கே வந்து கொண்டிருந்த எறிபத்தர் அதனைப் பார்த்து யானை வெட்டிக்கொன்று விடுகிறார்.இந்த ஆவேசமான அன்பு அவரை சிவன் அன்புக்கு பாத்திரமாக்குகிறது.

தன் பட்டத்து யானையை யார் கொன்றது என்று சினந்து வரும் புகழ் சோழன், யானை சிவனுக்கு கொய்த பூவை தரையில் தட்டியது என்று கேள்வியூற்று ‘ஆ ஆ தவறுக்கு என் யானைதான் காரணம்.அந்த பாவத்துக்காக நானும் என் தலையை வெட்டி சாவேன் என்று வாளைத்தூக்க, எறிபத்தர் தடுக்கிறார். புகழ்சோழன்,எறிபத்தர் இருவருமே நாயனார்களாகிறார்கள்.

x - x - x - x

இயற்பகையார்- வணிகரான இயற்பகையாரிடம் சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான், இயற்பகையாரின் மனைவியை தன்னுடன் கூட்டிச்செல்ல கேட்கிறார்.

சிவனடியார் கேட்டு மறுக்க முடியாத இயற்பகையாரும் அவர் மனைவியும் அதற்கு உடன்படுகிறார்கள்.

சிவனடியார் இயற்பகையார் மனைவியை கூட்டிப்போக, பெருங்கூட்டம் அந்த மானத்துக்கு கேடான விசயத்தை எதிர்க்க இயற்பகையார், எதிர்த்தவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்.

சிவன் தன் வேடம் கலைத்து அருள் சொறிந்து ஆசீர்வதிகிகிறார் இயற்பகையாரையும் அவர் மனைவியையும்.

x - x - x - x

குங்கிலியக்கலயர்:- இவருக்கு திருக்கோவிலில் குங்கிலிய தூபம் இடுவதுதான் செய்யும் தொண்டு.

குங்கியல தூபத்தை பெருங்கஸ்டத்திலும் செய்து வருகிறார்.உணவுக்கு வழியாக தன் தாலியை கழற்றி விற்றுவரச்சொல்கிறார் குங்கிலியகலயர் மனைவி.

அதை விற்று உணவுப்பண்டங்கள் வாங்காமல்,குங்கிலியம் வாங்கி தூபம் போட்டு செலவு செய்துவிடுவார்.

இதைக்கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் குங்கிலியகலயரின் வீட்டில் பொன்னையும் பொருளையும் நிரப்பி ஆசீர்வதிக்கிறார்.

x - x - x - x

மானகஞ்சாறர்:- விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரே ஒரு செல்ல மகள் பிறக்கிறாள்.

மகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் எல்லாம் நிச்சயத்து விடுகிறார்.

திருமணத்தின் முந்தின நாள் அடியவராய் வந்த சிவபெருமான், திருமணப்பெண்ணின் அழகிய தலைமுடியை அவர் காணிக்கையாக கேட்கிறார்.

மானகஞ்சாறர் தயங்காமல் தன் மகளின் முடியை வெட்டி சிவனடியாருக்கு கொடுத்து விடுகிறார்.

மானக்கஞ்சாறர் நாயனாராகிரார்.

x - x - x - x

ஏயர்க்கோன் கலிகாமர்:- மானகஞ்சாறர், சிவனடியார் கேட்டதற்காக தன் மகளின் முடியை வெட்டி கொடுத்தார் அல்லவா?

அந்த மகளை மணமுடிக்க மறுநாள் மாப்பிள்ளை வருகிறார்.அந்த மாப்பிள்ளைதான் ஏயர்க்கோண் கலிகாமர்.

இவ்வாறு தான் மணக்கப்போகும் பெண்ணின் தலையிலுள்ள, முடி இல்லாமல் அசிங்கமாக இருப்பது பற்றி, கவலைப்படாமல் அதே பெண்ணையே திருமணம் முடித்து சிவனக்கு தொண்டு செய்ததால் இவர் ‘ஏயர்க்கோன் கலிகாமர் நாயனாரானார்.(இவருக்கு இன்னோரு கதையும் இருக்கிறது...

x - x - x - x

எப்பவும் பிரபல நாயனார்கள் புரொபைலேயே பார்த்துகிட்டு இருக்ககூடாதுன்னு இன்னைக்கு எனக்கு தெரிஞ்சது... :)

1 comment:

  1. பக்திப் படங்களைப் பார்ப்பது போன்ற பிரமை… கடவுளே ஆனாலும் கேள்வி கேட்காமல் நம்பி மனைவி மக்களை கொடுமைப்படுத்துவது பயங்கரமாகவே இருக்கிறது… அரிச்சந்திரன் கஷ்டப்பட்டது சத்தியத்திற்காக - ஆனால் இவர்கள் கஷ்டப்பட்டது கடவுள் என்ற பிம்பத்திற்காக…sorry vijay if my comment hurt you… :-(

    ReplyDelete