Wednesday 12 December 2012

தந்தைமை...

எதிர்த்த வீட்டின் ’பத்து வயது பெண் குழந்தை’ பட்டம் செய்யும் முயற்சியில் இருந்தது என்பதை, என் வீட்டில் இரண்டாவது காபியை வெளியே எடுத்து வந்து குடிக்கும் போது பார்த்தேன்.

கலர் பேப்பர் பென்சில் கத்திரிக்கோல் நூல் பசை எல்லாம் வைத்து முகத்தை சீரியஸாக கொண்டு வேலை செய்தாள்.

அறிவும் நுட்பமும் உழைப்பும் பொறுமையும் சேர்ந்த வேலையல்லவா? 

என்னை ஈர்த்தது அவளுடைய பாசாங்கு. 

அந்த காட்டிகொள்ளுதல். 

அதில் உச்சமாக ,அந்த பென்சிலை தன் காதில் வைத்துகொள்ளும் தன்மை.

ஆசாரிகள் வேலை செய்யும்போது அப்படி வைத்துகொள்வார்கள்.

அவர்கள் அப்படி வைத்துகொண்டு வேலை செய்வதை பார்ப்பதற்கே ஸ்டைலாக இருக்கும்.

அதை எங்கோ பார்த்திருப்பாள் போல.

அது மாதிரியே வைத்துகொண்டு வேலை செய்தாள்.

அந்த பென்சிலுக்கும் பாருங்கள் ,அவள் காதில் இருக்க பிடிக்கத்தான் செய்தது. ஒவ்வொருமுறை தன் வேலை முடிந்ததும் அதுவே சிறுமி காதில் போய் லாவகமாய் உட்க்கார்ந்து கொண்டது.

“அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!”

ஆணுக்கு தந்தைமை பொங்கும் நேரம் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கும் ஃபீலிங்தானே !

No comments:

Post a Comment