Tuesday 4 September 2012

வக்கீல் படை


எல்லோரும் நமக்காக வாதாட, நம் மூளையில் பெரிய வக்கீல் படையே வைத்திருக்கிறோம்.

அந்த படை நமக்காகவே வாதாடுகிறது.

நாம் கொலையே செய்திருந்தாலும் நம் பக்கம் ஞாயம் இருக்கிறது என்று வாதாடுகிறது.

அவன் இப்படி ஞாயம் பேசினால், நீ அப்படி பேசு என்று பாயிண்டுகள் எடுத்து கொடுக்கின்றது.

ஆந்த வக்கீல் படையை கொல்ல முடியவில்லை. 

சில பேர், நாம்தான் அந்த வக்கீல் படை என்று குழப்புகிறார்கள்.

சில பேர் அந்த வக்கீல் படை இல்லாவிட்டால் நம்முடைய “சர்வைவல்” கஸ்டம் என்கிறார்கள்.

மதங்களும் தியானங்களும் சடங்குகளும் மந்திரங்களும் “அந்த வக்கீல் படையை “ ஒரளவுக்கு அமைதியாய் வைத்திருக்க முயற்சிக்கின்றன.

ஆனாலும், இச்சையை தொடர்ந்து விரும்புவது அடிப்படை குணம் என்பதாலும், அதை தக்க வைத்து கொள்வது நம் அடிப்படையாய் இருப்பதாலும் “வக்கீல் படையில்” வக்கீல்கள் அதிகமாய் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்களே தவிர குறைந்த பாடில்லை. 


No comments:

Post a Comment