Tuesday 2 October 2012

சுரண்டல்...

அவனுக்கு “அஸின்” மாதிரி ஒரு தோழி(?) கிடைப்பாள், என்று கனவிலும் நினைக்கவில்லை.கிடைத்தாள்.
ஆனால் ”அவள்” அவன் நண்பனின் முன்னாள் காதலி.இசை கல்லூரியில் படிப்பவள்.கடைசியாக நண்பனிடத்து அவளிடம் பழகுவதற்கு அனுமதி வாங்கி விட்டான்.” நல்ல பொண்ணுதான் மச்சி, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றான்.
இவனும் அவளிடத்தில்
 கவிதை பேசுபவனாகவும்,குழந்தைகளை கண்டு குதூகலிப்பவனாகவும்,இயற்கையை கண்டு ரசிப்பவனாகவும், நிறைய புத்தகம் படித்த அறிவாளியாகவும் காட்டி கொண்டான்.

அவள் சொன்னாள் “எங்கிட்ட நிறய கர்னாட்டிக் மியுசிக் கேசட் இருக்குதுப்பா.இப்பத்தான் அத சிடி (cd) யா மாத்திண்டு வரேன்”

“ஒரு கேசட் டூ சிடி, எவ்வளவு காசு”

“காசெல்லாம் கொடுக்க மாட்டேன்.வீட்டு பக்கத்துல ஒரு கேசட் கடை வெச்சிருக்கிற பையன் ஃப்ரீயா பண்ணி தருவான்”

“அது எப்படி ப்ரீயா”

“சும்மா, சிரிச்சு, எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா” அவ்வளவுதான் கேட்பேன் அதுக்கே அப்படி ஹெல்ப் பண்ணுவான் “

அவனுக்கு தொண்டையில் துக்கம் அப்பிகொண்டது.
நிற்க
மறுநாள் கல்லூரியில் ஃபீஸ் கட்ட கடைசி நாள். பெரிய வரிசையில் நடுவில் அவன். “காப்பர் சல்பேட்” கலர் சாரி கட்டிய தேவதை ஒருவள் அங்கு வந்தாள்.பெரிய வரிசை பார்த்து விழி விரித்தாள்.இவனிடம் நேராக வந்து, தனக்கும் சேர்த்து பீஸ் கட்ட முடியுமா, என்று கொஞ்சு கிளியாக கேட்டாள்.இவன் கத்தினான் “ நீங்க வேணா என் இடத்துல நில்லுங்க.நான் காசு தரேன்.எனக்கும் பீஸ் கட்டி விடுங்கள்” .
தேவதை பதற்றமாகி இடம் நகர்ந்தாள்.
எதோ ஒரு நிம்மதி மனதில் படர்ந்தது.பீஸ் கட்டியதும், கேண்டீனில் “சோளா பூரி” வாங்கி தின்றான் 

No comments:

Post a Comment