Tuesday 2 October 2012

தீவிர எலக்கியவாதியின் ரஜினி மோகம்...

பாட்க்ஷா படம் ரிலீஸாகும் போது நான் பாலகுமாரனின் தீவிர வாசகன்.

இரும்பு குதிரைகள் விஸ்வநாதனையும் காயத்திரியும் எனக்கு எத்தனை முறை படித்தாலும் 
சலிக்காத கேரக்டர்கள்.

பாலகுமாரன் ஐயன்மீர் காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன” என்று கதையின் நடுவே சொல்ல ஆரம்பித்தாலே குக்ஷியாகி விடுவேன். 

அதை திரும்ப திரும்ப படித்து அப்பாவிடமோ அம்மாவிடமோ அண்ணன்களோட மொக்கை போட்டு கொண்டே இருப்பேன்.

நமக்கு தெளிவு வந்து
 விட்டது என்றே நினைத்தேன்.

பாலகுமாரன் பக்குவபடுத்தி விட்டார்.

இனிமேல் ரொம்ப சிரிக்க கூடாது, அளவாய் பேச வேண்டும். நம்மையே நாம் உற்று பார்த்து கொள்ள வேண்டும்.

இது மாதிரி எல்லாம் தோண்றும்.

யாரை பார்த்தாலும் தலை ஒரு தட்டு தட்டி ”வாழ்க்கைன்னா என்னன்னா” என்று அட்வைஸ் செய்ய தோண்றும்.( பாலகுமாரன் அதிகம் படிப்பவர்கள் எல்லோரும் இதில் மாட்டியே ஆகவேண்டும்).

அப்போது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான் ( இப்போதும் அப்படித்தான்).

இலக்கிய முத்தாகி விட்டோம். வாழ்க்கையை பற்றி ஒரு பார்வை வந்து விட்டது. இனிமேல் இந்த ரசிகன் கிசிகன் மண்ணாங்கட்டி என்றெல்லாம் சொல்ல கூடாது.

கீழ்நிலையான ரசிப்பிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைத்து கொண்டே பாட்க்ஷா படம் நாகர்கோவில் லட்சுமி தியேட்டரில் பார்க்க போனேன்.

பொதுவாக ரஜினியின் முதல் பாடலில் கிளர்வேன்.என்னையறியாமல் பரவசப்பட்டு சிரிப்பேன்.

சிலிர்பேன்.

ஆனால் இன்று அது நடக்காது “ரஜனி” ( கமல் ரஜினி என்றா சொல்வார். ரஜனி என்றுதானே சொல்வார்) என்று நானே சொல்லி கொண்டேன்.

எழுத்து போட்டான். அதுவே அசத்தல்.

பயம் வந்தது. நம்முடைய சீரியஸ் முகத்தை இந்த ரஜினி உடைத்து விடுவார்போல இருக்கிறதே.

அதனால் சிரித்து விடக்கூடாதே என்று கன்னத்தில் உட்புற சதையை கடித்து இழுத்து கடவாய் பல்லில் வைத்து கொண்டேன்.

பட் ஆல் ஆர் இன் வெயின்.

மாணிக்கம் அண்ணனாக ரஜினிகாந்த் கொட்டடியோடு ”நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்” என்று பாடும் போது என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.

சந்தோசம் கொப்பளிக்கிறது.

சிரிப்பு அள்ளுகிறது.

பாலகுமாரனாவது மண்ணாங்கட்டியாவது.

செமயா கைதட்டி படம் பார்த்தேன்.

கடைசியாக ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன் .

இரண்டும் வேறு வெறு டிப்பார்ட்மெண்ட் என்று.

இப்போதுவரைக்கும் தெலுகு படங்களை முதல் நாள் பார்க்கும் ஆர்வத்தோடவே இருக்கிறேன்..

No comments:

Post a Comment