Friday, 23 March 2012

அம்மா

அம்மாவிடம் வளரும் போது ரொம்ப அதிகாரம் செய்வேன்.முட்டை ஆம்லேட்,வெந்தும் இருக்க வேண்டும், அதிகம் வேகாமலும் இருக்க வேண்டும்.கொஞ்சம் காய்ந்தும் காயாமலும் இருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் கத்துவேன்.
’என்னால உங்களுக்கு எதுக்கு தொல்லை, நான் எங்காயாவது போறேன்.” 
”நானே ஆபீஸ் காலைலைல போயிட்டு நைட்டு வரேன், சோறு இப்படி குழுந்து கிடக்கே, நான் மனுசனா இல்ல பிச்சைகாரனா.”
இப்படி பல வசனங்கள்.சில வாக்கியங்கள் மனதை குத்தி கிழித்து விடும்.
ஆனால் அம்மா பதட்டபடுவதில்லை.அமைதியாய் இருப்பார்கள்(உண்மையிலே பா).
ஒரு அன்பு தருணத்தில் , திருச்செந்தூரில் மகளுக்கு மொட்டை போடும்போது அம்மாவிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நான் கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட நிறைய தடவ கத்தியிருப்பேன்.எப்படி அதை எடுத்துகிட்டீங்கம்மா.ரொம்ப நேரம் பதில் சொல்லாமல் தவிர்த்த அம்மா பிறகு “ நீ முதல் முதல்ல மழலை பேசும் போது, தப்பு தப்பா பேசுவதை ரசிப்பேன். அது மாதிரிதான் நீ டயலாக் பேசும்போதும் தோணும்” என்றார்.
 

1 comment:

  1. பின்னே எப்பிடி தாய் அன்பு தனலமற்றது என்பதில் சந்தேகம் வரும் உங்களுக்கு??? ஏதோ ஒரு பதிவில் நீங்கள் இப்படி எழுதி இருந்தத நினைவு.....

    ReplyDelete