Thursday 16 March 2017

பெண்களுக்கு ஒரு அட்வைஸ்...

பூமியில் இருந்து ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் சேட்டிலைட்டுகளை
200 கிமி உயரத்தில் கொண்டு போய்
விநாடிக்கு 8 கிலோமீட்டர்கள்
என்ற விசையில் தள்ளிவிட்டால், அது பூமியையே சுற்றிக் கொண்டிருக்கும்.
இதை ’ஆர்பிட்டல் வெலாசிட்டி’ என்பார்கள்.
அது போல ஒரு பெண்ணை இப்படி இப்படி ’அன்பு Emotional’ ஆக பேசி,
இப்படி இப்படி கனிவு காட்டினால் அந்தப் பெண் எத்தனை காலமானாலும் நம்மை சுற்றிதான் வரவேண்டும்,
வேறு எங்கும் போக வாய்ப்பே இல்லை என்ற மமதை இன்னமும் ”ஆண் மாடலுக்கு” இருந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் பெண்கள் தவறு செய்கிறார்கள் என்பேன்.
ஆண் கண்டுகொள்ளாமல், அன்பினால் அவரையே
அப்படி சுற்றுவது, அப்படி கெஞ்சுவது என்பது அந்த ஆணுக்கு மேலும் மேலும் போதையையும், திமிரையும் வளர்க்கவே செய்யும்.
“எங்கயும் போக முடியாது. நம்மக் கண்டுக்கலன்னாலும் நம்மளத்தான் சுத்திகிட்டே இருக்கனும்” என்ற எண்ணம் ஆண்களுக்கு அதிகக் கிக்கைக் கொடுக்கும்.
இல்லை இல்லை அன்பு என்து மனம் சம்பந்தப்பட்டது. அதை எப்படி மாற்றமுடியும் என்று வாதம் பெண்ணின் மனதுக்குள் வந்தால்,
“அன்பாயிருங்கள். உங்கள் மனதுக்குள் அப்படியே வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை. ஆனால் உன்னைச் சுற்றி வரும் ஒரு சேட்டிலைட் நான் என்ற புற ரீதியான உணர்வையாவது, தோற்றத்தையாவது அந்த ஆணுக்கு கொடுக்காமல் இருங்கள்” என்கிறேன்.
கிரகம் ஆழ் மனதில் மமதையோடு இருக்க,
அப்படி ஒரு கிரகத்தை பல சேட்டிலைட்டுகள் சுற்றுவதும்,
பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வகைமைதான்.
எக்காலத்திலும் எந்நிலையிலும் ’உன்னைத்தான் சுத்துறேன்னு, உன்னைத்தான் நினைக்கிறேன்னு’ ஆண்களுக்கு காட்டாம இருங்க...
ஜஸ்ட் ஜம்ப் பண்ணிருங்க...

No comments:

Post a Comment