Wednesday, 16 May 2012

  • முன்குறிப்பு:
    சின்ன சின்ன கதைகள். உங்கள் வாழ்க்கையை திசைமாற்ற போகும் கதைகள்.
    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை - 1
    ...
    நீங்கள் பேயை பார்த்திருக்கீர்களா என்று கேட்டார் வந்தவர் ?

    நான் பணிவோடு,” திருமணம் செய்தால் பார்க்கலாம் !”என்றேன்.
    ...
    என்னை குருவாக ஏற்று காலில் விழுந்து வணங்கினார் அவர்...

    ------------------------------------------------------------------------------------------------
    டுபாக்கூர் ஜென் கதை- 2

    முதலாளி எங்கே போயிருக்கிறார் ? என்று கேட்டேன்.

    மும்பைக்கு ! என்றான்
    ...
    ”மும்பைக்கா? நானும் மும்பைக்குதான் போயிருக்கிறாறோன்னு தப்பா நினைத்து விட்டேன் !“ என்றேன்.

    நான் அவன் இரண்டு பேருமே ஞானம் பெற்றோம். :)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 3

    பஸ்ஸில் அந்த பெண் மிக அழகாக இருந்தாள்.

    கண்டக்டர் உட்பட எல்லோரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.
    ...
    திடீரென்று “கர பூம் “ என்று தன் சளி மூக்கை சீந்தினாள் அவள்.

    கண்டக்டர் உட்பட பஸ்ஸில் எல்லோரும் ஞானம் பெற்றார்கள். :)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 4

    ”குருவே! ஒருவாரம் வெளியே போகிறோம்.ஏன் கடிகாரத்தின் பேட்டரியை எடுத்து வைத்து விட்டு செல்ல கூடாது? பேட்டரி மிச்சமல்லவா? ”என்றான் சிஸ்யன்.

    ஒரு வாரம் சுத்தாமல் இருந்தால் சின்ன முள்ளுக்கும் பெரிய முள்ளுக்கும் இடையே தூசி அடைத்து விடாதா ? என்றார் குரு.

    ஒளி பிறந்தது.:)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 5

    காலையில் குப்பை எடுக்க வந்தவரிடம் வெள்ளுடை குரு, மிக அருமையான புனித கருத்துகளை சொன்னார்.

    கேட்டதனால் புனிதமடைந்து விட்டாய் என்றார்.
    ...
    குப்பை எடுக்க வந்தவர் ஒரு அழுக்கு ஆப்பிளை காட்டி உங்கள் புனிதத்தால் இதை கழுவி கொடுத்தீர்களானால், எனக்கு பசியாரும் என்றார்.

    குரு வெளிச்சமடைந்தார்.

1 comment:

  1. அட! சூப்பரா இருக்கு பாஸ்! இருங்க உடனே ஷேர் பண்றேன்...

    ReplyDelete