இது முதல் கதைங்க....
கடையில் இருக்கும் போது ,ஒருவர் 500 ரூபாயோ 100 ரூபாயோ கொடுத்தாரானால், உடனே கல்லாவில் போடவே கூடாது, பட்டறை டேபிளில் பேப்பர் வெயிட் வைத்து வைக்க வேண்டும் என்ற பாடத்தை ஏழாம் வகுப்பில் படித்தேன்.
அப்பா கடையில் இல்லாத சமயத்தில் கார்மெல் ஸ்கூல் கேண்டீனிலிருந்து ஒருத்தர் ரெண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கினார்.
100 ரூபாய்தான் கொடுத்தார்.
நான் 100 ரூபாய்க்கு சில்லறை கொடுக்கும் போது , 500 ரூபாய் கொடுத்தேன் என்று சாதிக்கிறார்.
என்னால் சரியா சண்டை போட முடியவில்லை. கடையில் வேலை பார்க்கும் அண்ணன் எனக்கு சப்போர்ட் பண்ண பிரச்சனை முத்துகிறது.
அப்போதான் கடைக்குள் அப்பா வருகிறார். என்ன விசயம் என்று கேட்டு கொண்டார்.
என்னை பார்த்து “நீ 100 ருபாய் வாங்குனியா !500 ரூபாய் வாங்குனியா ? “ என்று கேட்டார்.
அந்த பதட்டத்தில் திகைத்து ஒரு நிமிடம் யோசித்தேன் பாருங்கள், டக்கென்று 500 ரூபாயாக பாவித்து மிச்சத்தை கொடுத்து பிரச்சனையை முடித்தார்.
கிட்டத்தட்ட அழுது விட்டேன். “அவரு 100 ரூபாதான் குடுத்தாரு “ என்று குளறும் குரலில் சொல்ல,
அப்பா என்னை பார்த்து சிரித்தார்.
“ அடிச்சு பேசனும்ப்பா ! நீ யோசிச்சா உன்ன யாரும் நம்ப மாட்டாங்கல்ல . சரி அத விடு. நீ போய் பக்கத்து கடையில போய் ரெண்டி லிம்கா வாங்கிட்டு வா !” குடிப்போம் என்று சொன்னார்.
அப்பா என்னை மன்னித்தது , திட்டாதது எரிச்சலையூட்டிற்று என்றால் “லிம்கா” வாங்கி கொடுத்தது செம காண்டாக்கியது என்னை.
சரி. முதல் கதை முடிஞ்சுட்டுங்க. அப்படியே ரெண்டாவது கதைக்கு வாங்க .
500 ரூபாய் நஸ்டம் ஏற்படுத்திய மறுநாள் “ஜான் பேட்ரிக்” சார் டுயுசன் போறேன்.
ஜான் பேட்ரிக் தான் கணிதத்தை லவ் பண்ண சொன்னவர். கணிதம் மேல் ஆர்வம் வர காரணமானவர்.
அவரிடம் பொதுவாக கார்மெல் ஸ்கூல் பசங்கதான் படிப்பாங்க.அங்கு நிறைய கார்மெல் ஸ்கூல் பிரண்ட்ஸ் கிடைச்சாங்க.
எஸ். எல் .பி ஸ்கூல்ல இருந்து நானும் , ”ரெஜூ ஐப்” பும் தான் இருந்தோம்.
ரெஜூ ஐப் மலையாளம் எடுத்து படித்தான். அதாவது எல்லாம் ஆங்கிலம், தமிழுக்கு பதிலா மலையாளம் பாடம். ரெஜூ ஐப் ரொம்ப அப்பாவியா இருப்பான். கிண்டலடிச்சிகிட்டே இருப்பேன்.
நானும் ரெஜூ ஐப்பும் டுயுசன் ஃபீஸ் கொடுக்கிற நாள். முதலில் 50 ரூபாய ஜான் பேட்ரிக் சார் கிட்ட கொடுத்துட்டேன். எல்லோரும் கொடுத்துட்டோம், ரெஜு ஐப்பை தவிர.
டுயுசன் முடிஞ்ச உடன் சார் கேட்கிறார் , ”ரெஜூ ஐப் ! என்னடே மறந்துட்டியா “ .
அவன் தயங்கிய படியே 40 ரூபாய் கொடுத்தான்.
என்னடே பத்து ரூபாய் கொறையுது .
ரெஜு ஐப் தெளிவாய் கூறினான் . “ சார் அம்மா சொன்னாங்க , ஒரு சப்ஜெக்ட்டுக்கு 10 ரூபாய் வைத்து அஞ்சு சப்ஜெக்டுக்கு 50 ரூபாய் ஃபீஸ். உன் சார்தான் மலையாளம் எடுக்கலியே . அப்போ 40 ரூபாய்தான கணக்கு வரும்”
சார் அசந்து விட்டார் “ நீ சொல்றதும் சரியாதாம்பா இருக்கு” . என்று சிரித்தார்.
வெளியே வந்து ரெஜு ஐப்பிடம் அவன் அம்மா ஏன் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்று எரிச்சலாய் கேட்டேன்.
அதற்கு அவன் அது அம்மா சொன்னது இல்லையென்றும், தானே யோசித்து சொன்னது என்றும் பெருமையா சொன்னான்.
அந்த பத்து ரூபாய உண்டியல்ல “கூட்டி போட்டு” பெரிய சைக்கிள் வாங்குவானாம் அந்த கேரள குட்டன் ....
சொல்லுங்க பாஸ்.
முதல் கதைக்கும் ரெண்டாவது கதைக்கும் எதாவது சம்மந்தம் உண்டா ? லேதா ? :))))

No comments:
Post a Comment