Monday 1 April 2013

கதை போல ஒன்று - 78

காலை பதினொன்று இருபத்தியைந்துக்கு டிராயிங்கை செக் செய்துகொண்டிருக்கும் போது அந்த அறிவிப்பு,கூரையில் பதிக்கபட்ட ஸ்பீக்கரில் வந்தது.

அனைவருக்கும் வணக்கம். 

நேற்றிரவு பத்து மணிக்கு நம்முடன் பணிபுரிந்த முத்துராஜ் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.அவருடைய வயது முப்பத்தி ஒன்பது.அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இரண்டு நிமிடம் எழுந்து மவுன அஞ்சலி கொடுப்போம்.

கேடபதற்கு அதிர்ச்சியாக இருந்தது.

காலையில் மெயில் வந்திருக்கும்.

வேலை அவசரத்தில் லோட்டஸ் நோட்ஸ் ஒபன் பண்ணவே இல்லை.

யார் முத்துராஜ்? எந்த டிப்பார்ட்மென்ட் எதுவும் தெரியாது.

அமைதியாக நின்றேன்.

மவுனம் கரைந்து கரைந்து எல்லோர் மேலும் படர்ந்து கொண்டிருந்தது.

அனைவரும் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டிருந்தார்கள்.

அதிலும் சிராஜுதின் சார் முகத்தை வைத்திருந்த இறுக்கத்தை பார்க்க சிரிப்பாய் இருந்தது.

என் முன்னே நிற்கும் இந்த புது டிரயினி பெண்ணின் பின்னழகு வேறு ஈர்த்துகொண்டே இருந்தது.

எப்படி இருக்கிறாள். செம ஸ்டெரச்சர்.நச்சுன்னு இருக்கு.இவள எப்பத்துல இருந்து கவனிக்க ஆரம்பிச்சோம்.

ஆங் போன வாரம் தண்ணி பிடிக்க கூட்டமா நிற்கும் போது குனிஞ்சு நின்ன கோணத்திலிருந்துதான் அவள் மேல் பார்வை பதிய ஆரம்பித்தது.

அந்த அந்த வாட்டர் சப்ளையிங சிஸ்டம் பெண்களுக்கு கொஞ்சம் கஸ்டம்தான்.சுத்திலும் ஆண்கள் நிற்க குனிந்து நீர் நிரப்ப வேண்டும்.சுடித்தார் அணிந்திருந்தால் முன்னால் யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற பதட்டமிருக்கும்.அதை தவிர்க்க மெசின் பக்கம் நெருக்கமாக நின்றால் பின்பக்கத்தை அனைவரும் பார்க்கும் படியான நிலை.

பெண்கள் பாடு கஸ்டம் தான்.

இந்தபில்டிங் அட்மின் கிட்ட சொல்லி பெண்கள் குனிஞ்சு தண்ணி பிடிக்காம நின்னுகிட்டே தண்ணி பிடிக்கிறா மாதிரியான ஒரு அமைப்ப கொண்டு வரச்செய்யனும்.

நல்ல இலக்கியதரமா வார்த்தைகள போட்டு போட்டு மெயில் அனுப்பனும்.

மாசா மாசம் கண்டியனஸ் இம்புருவ்மென்ட்க்கு கிடைக்கிற அவார்ட்ட நம்ம வாங்கிரனும்.

ச்சே எந்த வயசுலத்தான் இந்த பொம்பளங்கள பார்க்கிற வெறி அடங்கப்போகுதோ.

ம்ம்ம்.

இந்த வாரம் சனிக்கிழமை வேலைக்கு வரச்சொல்வான்களோ?

இவனுங்க எழவு பெரிய எழவா போச்சு. த்தா சூத்துல வெச்சி ஏத்தேறேண்டா ஒருநாளைக்கு.

எல்லா சனிக்கிழமையும் உங்களுக்கு வந்து கஞ்சி காய்ச்சனுமாடா லூசு நாய்களா?

ம்ம்ம்.

இப்போ இவனங்க மேல இவ்வளவு கோபம் வருது. ஆனா ஹைதிராபாத்துல இருக்கும் போது சென்னைக்கு வரணும்னு எவ்வளோ துடிச்சோம்.

”விஜய் நான் சொல்றத தெளிவா கேளுங்க.உங்க பொண்ணுகிட்ட வீட்ல பேசும் போது நீங்களும் உங்க வைஃப்ஃபும் இங்கிலீஸ்லையே பேசுங்க.ஏன்னா அவ குட்டிப்பொண்ணு.எங்களுக்கு தெலுகும் இங்கிலீசும்தான் தெரியும்.அவளுக்கு தெலுங்கு தெரியாது.நாங்க இங்கிலீசுல என்ன சொன்னாலும் அதுவும் அவளுக்கு புரிய மாட்டேங்குது” அப்படின்னு ஸ்கூல்ல சொன்னதெல்லாம் அன்னைக்கு இண்டர்வியூவ்ல ஞாபகம் வந்துச்சே.

”சார் என்ன பேக்கேஜ் வேணுமின்னாலும் கொடுங்க.நான் சென்னைக்கு வரணும் அப்படின்னெல்லாம் கெஞ்சினேனே.இப்ப சனிக்கிழமை போறது நமக்கு கசக்குதா”.

ஆமா அப்போ அப்படிச்சொன்னேன்.

இப்போ எல்லா சனிகிழமையும் போனுமா?

இந்த வாரம் கொளத்தூர் போகனும்.அம்மாவ பார்க்கனும். மீன் கொழம்பு சாப்பிடனும்.

சென்னையில எங்க நாகர்கோவில்மாதிரி மீன் கெடைக்குது.

நாகர்கோவில்ன்னா புன்னைநகர்ல இருந்து நேரா சைக்கிள விட்டா ஹோலிக்கிராஸ் காலேஜ்.அங்க இருந்து ரைட்ல திரும்பினா குருசடி சர்ச் சும்மா ஜம்புன்னு கம்பீராமா நின்னுகிட்டிருக்கும்.

உள்ள இருக்கிற பெரிய காம்புவண்டுக்குள்ள மீன் மார்கெட்.

வாளையும் நெத்திலும் சாளையும் வெளையுமா பிரக்ஷ்க்ஷா இருக்குமே.

நெத்திலி மீன் மாங்கா அவியல் வச்சு மரச்சீனி கிழங்குக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட்டா சொர்க்கம் தெரியுமே?

அதெல்லாம் இனி என்னைக்கு சாப்பிடுறது.

அதுலயும் அந்த பூவரசு மரத்தடியில் விற்கிற பொம்ள.அட சும்மா கின்னுன்னு இருக்கும்.

வேணுமின்னே கூட்டம் வரணுமின்னு ஒத்தயா மாராப்பு போட்டிருக்குமே.

இப்படி நினைக்கிறது தப்பில்லையா.

வியாபாரத்துக்காக அது ஸீன் காட்டுமா.

அது பத்தின ஆதாரம் தெரியாம இப்படி நினைக்கிறோமே.

நாம நெனைக்கிறது யாருக்கு தெரியப்போகுது.

வாட்சைபார்த்தேன்.

இன்னும் அரை செகண்ட் இருந்தது.

என்னடா நினைச்சிக்கிட்டுருக்கோம். இங்க ஒருத்தன் முப்பத்தி ஒன்பது வயசுல செத்து போயிருக்கான்.

அவனப்பத்தி நெனக்காம கண்டதையும் பத்தி...

அவனுக்கு புள்ள இருக்குமா? பொண்டாட்டிக்கு வேலை இருக்குமா?

அப்பா,புருசன் இல்லாத அந்த சூன்யமான உலகத்த அவுங்க எப்படி சமாளிப்பாங்க.

எனக்கு இது மாதிரி நடக்குமா.

நானும் பொட்டுன்னு பொண்டாட்டி பிள்ளய விட்டுட்டு போயிருவேணா? என் குடும்பம் என்ன நம்பித்தான் இருக்குதா? அல்லது அது ஒரு மாயையா?

மவுன அஞ்சலி நேரம் முடிந்தது என்ற அறிவிப்பை தொடர்ந்து எல்லோரும் கச்சகச்சவென கலைந்தார்கள்.

நான் பெருமூச்சை விட்டபடி வாட்டர் பாட்டிலை திறந்து அரைபாட்டில் நீர் குடித்தேன்.

இரண்டு நிமிடம் என்னவெல்லாம் சிந்தித்தேன் என்பதை ரீகால் பண்ண எனக்கு விருப்பமே இல்லை.

மெயில் பாக்சை திறந்தேன்.

அதில் முத்துராஜ் மரணச்செய்தி வந்திருந்தது போட்டோவுடன். நல்லாத்தான் இருக்கார்.

இன்னும் ஒரு மெயிலில் முத்துராஜ்ஜின் குடும்பத்திற்கு உதவ மனம் இருந்தால், இந்த சுட்டியை அழுத்தி உங்கள் உதவித்தொகையை அதில் பதியுங்கள்.

அதை உங்கள் சம்பளத்தில் இருந்து கம்பெனி பிடித்துக்கொள்ளும் என்றிருந்தது.

அந்தச்சுட்டியை அழுத்தினேன்.

முதலில் ஆயிரம் ருபாய் என்று டைப் செய்த்தேன்.

பின் அப்படியே யோசித்தேன்.

இரண்டாயிரம் என்று போட்டேன்.

இரண்டாயிரம் அதிகமாயிற்றே என்பது மாதிரி இருந்தது.

சட்டென்று அயிரத்து ஐநூறு என்று போட்டு “சம்மதம்” பட்டனை அழுத்தி அதோடு முத்துராஜை மறந்து பச்சை ஹைலைட்டரையும் சிகப்பு பேனாவையும் எடுத்து பட்டுபுடவை மாதிரி விரித்து வைக்கபட்ட டிராயிங்குனுள் என் தலையை கவிழ்த்தேன்.

1 comment:

  1. மௌனங்களில் நம் எண்ணங்கள் பேசுகின்றன…!
    தனிமைகளில் நம் குணங்கள் பேசுகின்றன…!

    ReplyDelete