உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்,
கீழ்கண்ட வாக்கியங்களில் சிலவற்றோடு பொருந்தி போவீர்கள்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். தவறு இருக்கலாம்.
-ஜெயமோகன் ரொம்ப பிடிக்கும்.அவர் எழுத்துக்களை அதிகமாக புகழ்வீர்கள்
-அசைவம் உண்பதை அருவருப்பாக,மனித தன்மையற்ற செயலாக பார்ப்பீர்கள்
-சிவன் திருமால் எல்லாம் பெரிய டீசண்டான சாமியாகவும், பேச்சி,சுடலைமாடன்,அய்யனார் எல்லாம் கொஞ்சம் சுமாரான சாமியாகவும் தெரியும்.
-அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை கேசுவலாக கிண்டலடிப்பீர்கள்
-அருந்ததிராயை பிடிக்காது.
-அ.மார்க்ஸ்,ஞானி போன்றவர்களை பிடிக்கவே பிடிக்காது
-விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும்.அம்பேத்காரை பிடிக்காது.அம்பேத்காரை பிடிக்காது என்று வெளிப்படையாக உங்களுக்கே தெரியாது.அது உங்கள் ஆழ்மனதில் இருக்கும்.
-இடஒதுக்கீடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.இடஒதுக்கீடு இல்லாவிட்டால் 1000 பேர் பாதிக்கபடுவர்.இருந்தால் 2 -பேர் பாதிக்கபடுவர் என்ற அறிவெல்லாம் உங்களுக்கு வரவே வராது. சும்மா பிளேனா என் சித்தி பையனுக்கு 1000 மார்க் இருந்துச்ச்சி ஆனா சீட் கிடைக்கல என்று அற ஆவேசம் கொள்வீர்கள்.
-கம்யூனிசம் பற்றி அட்சர சுத்தமாக எதுவும் தெரியாது.ஆனால் கர்நாடக சங்கீதம் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள்.
-பாபர் மசூதி இடிப்பு பற்றி ஆவேசமாக எல்லாம் பேச மாட்டீர்கள்.வி.எஸ் நய்பால் ஸ்டைலில் வரலாறு பேசுவீர்கள்.
-சமஸ்கிருதம் மேல் உங்களை அறியாமல் பற்று இருக்கும்.தமிழில் நாலாயிர திவ்விய பிரபந்தமும்,தேவாரமும் மட்டும் பிடிக்கும்.
-தமிழில் அர்ச்சனை செய்வது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.அது பற்றிய போராட்டங்களில் சமஸ்கிருதம் வெற்றி பெறுவதை ரசிப்பீர்கள்.ஆனால் வெளியே அது பற்றி பேச மாட்டீர்கள்.
-தினமும் காலையில் ஹிந்து படிப்பீர்கள்.தமிழிலி தினமணி படிப்பீர்கள்
-அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று திராவிட கழகம் போராடினால்,” உங்களுக்குதான் கடவுளே கிடையாதே.பிறகு ஏன் இந்த போராட்டம்” என்று லூசுத்தனமாக பேசுவீர்கள்.
-ரஜினிகாந்த கமல் போன்றவர்களை அவர்களுடைய உயர்ஜாதி பிறப்புக்காக பிடிக்கும் என்பதை வெளியே சொல்ல மாட்டீர்கள்.அது உங்களுக்கே தெரியாது.ஆனால் ஆழ்மனதில் கிடக்கும்.
-சர்தார் வல்லபாய் பட்டேல்,திலகர் எல்லாம் சூப்பர் தலைவர்கள் என்பீர்கள்.
-திருமாவளவன் போன்ற ஆளுமைகளின் சமூகத்தேவையை பற்றி ஆராய மாட்டீர்கள்.சும்மாவேனும் அவருடைய ஒரு சில தவறுகளை வைத்து மட்டமாக திட்டுவீர்கள்.
-இந்து மதத்தின் முட்டாள்தனமான பழக்கவழக்கத்திற்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பீர்கள்.
-ஜாதி அபிமானம் அதிகம் இருக்கும்.எஸ்.சி, எஸ்.டி எல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைக்கிறார்கள் என்று தாழ்ந்த குரலில் சொல்வீர்கள்.
-பாலகுமாரனின் உடையாரை கொண்டாடுவீர்கள்.
-மதானி பலவருடம் சிறையில் கிடக்கும் அநியாயத்தை பற்றி யாராவது எழுதினால் அதை வாசிக்காமலே கடந்து விடுவீர்கள்.அது பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமே இருக்காது.
-சினிமாவில் ஹீரோ எதாவது நல்லதாக செய்யப்போகும் போது பின்னால் ஒலிக்கும் சமஸ்கிருத சங்கீத வார்த்தைகளை கேட்டால் உங்களை அறியாமலே அது ஒரு உயர்வு என்று நினைத்துக் கொள்வீர்கள்.
-ஆனந்த விகடன்,குமுதம் போன்ற மறைமுக இந்து ஆதரவு இதழ்கள் உங்களுக்கு பிடிக்கும்.
-காந்தி ஒரு உயர் ஜாதிக்காரர் என்பது பற்றி பெருமை உங்களுக்கு மனதிற்குள்ளே உண்டு.ஆனால் வெளியே சொல்ல மாட்டீர்கள்.
-காஞ்சி பெரியவர் போன்றவர்களின் ஜாதி வெறியை நாசூக்காக மறந்து அவரை கொண்டாடுவீர்கள்.
-புட்டபர்த்தி சாய்பாபாவை,ரமணரை பெரிய மகான் என்று தெய்வமாக கும்பிடுவீர்கள்.அவர்கள் சாதரண மனிதர்கள்தாம் என்று சொன்னால் தைய்யோ முய்யோ என்று குதிப்பீர்கள்.
-கஷ்மீர் விவகாரம் பற்றி,அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் பற்றி எதுவும் தெரியாது உங்களுக்கு.
-சோ.ராமசாமிதான் சிறந்த அரசியல் விமர்சகர் என்று நினைப்பீர்கள்.
-வி.பி.சிங் அறவே பிடிக்காது.
-ஒரு இஸ்லாமியர் தொப்பி வைத்து,தாடி வைத்து உங்களருகில் அமர்ந்தால் மனத்துக்குள் பதட்டம் கொள்வீர்கள்
-பெந்தகொஸ்தே கூட்டங்களை மிக நக்கலாக பார்ப்பீர்கள்.ஏன் இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி கதறுகிறார்கள் என்று இரக்கமாக ஒரு நிமிடம் யோசிக்க மாட்டீர்கள்.கிறிஸ்டின் மிசனரீஸ் எல்லாம் மோசமானது என்ற எண்ணம் ஆழ உங்கள மனதில் இருக்கும்.
-மோடியை பிடிக்கும் உங்களுக்கு.மோடி செய்த கொலையெல்லாம் மறந்து விடுவீர்கள்.அவரால் மட்டுமே நல்ல ஆட்சி செய்ய முடியும் என்று நினைப்பீர்கள்."
அன்பு நண்பரே நீங்கள் குறிப்பிட்ட இவற்றுடன் நான் பொருந்தி போவதில்லை .இருந்தாலும் உங்கள் இந்து விரோத எழுத்திற்கு பதில் கூறவே இதை எழுதுகிறேன்
ReplyDelete1)மனதளவில் நீங்கள் கிருத்துவராக இருப்பதால் இப்படி எழுதலாம் .
2)மற்ற மதக்காரர்கள் உங்களை பெருமை பேசுவதற்காக எழுதலாம்
3) சராசரி மத சார்பற்றவர் போல காண்பிக்க (கருணாநிதி போல) இப்படி எழுதலாம்
எப்படியோ ஆகட்டும் இந்து மதம் யாரையும் மதம் மாற்றுவதாக நான் கேள்விப்படவில்லை .முஸ்லிம் எப்போதும் straight forward அவர்கள் யாரையும் மூளை சலவை செய்வதில்லை ,தங்கள் விருப்பத்தின் பேரில் மதம் மாறுகிறார்கள் உதாகரணம் a .r ரகுமான் ,யுவன் சங்கர்
ஆனால் கிருத்துவர்கள் பள்ளிகூடம் ,மருத்துவமனை இப்படி பல சேவைகள் செய்து நன்றி க்கடனை உருவாக்கி மதமாற்றம் செய்கிறார்கள்
இதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் .ஒரு காலத்தில் உலகம் முழுவதும் மதம் மாற்ற புறப்பட்டவர்கள் இப்போதும் அவர்கள் பனி முடியவில்லை
50000 பேரைக் கொலை செய்தவன் பிரான்சிஸ் சேவியர் புனிதன் மோடி கொலைகாரர் உங்கள் பார்வையில்
ஹிந்து என்று சொன்னால் அவன் அடிப்படைவாதி R S S என்று முத்திரை குத்துவீர்கள் .வரலாற்றை புரட்டி பாருங்கள்
ஒருகாலத்தில் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்த பூமி அன்னியர் வருகையால் கொலைக்களம் ஆனதை
இதை படித்து என்னை unfriend செய்வீர்கள் .ஆனால் நான் ஒரு ஹிந்து வெறியன் இல்லை .
உங்கள் இந்த கட்டுரை என்னை இப்படி எழுத வைக்கிறது