தீராநதி இதழ் ஆரம்பித்த புதிர்தில் சுந்தரராமசாமி, வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.
அதில் “வால்கா முதல் கங்கை முதல்” புத்தகத்தை பற்றி வாசகர் கேட்க, அதற்கு சு.ரா சுற்றி வளைத்து
இந்தியர்களுக்கு கருத்தை மிட்டாயாக்கி கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள் என்று வருத்தபட்டும்.
அமெரிக்காவில் வரும் “For Dummies" புத்தகமே படிக்க கஸ்டமாய் இருக்கும் என்றும் ”வால்கா முதல் கங்கை வரை” புத்தகம் சரியில்லை என்பது மாதிரி சொல்லியிருப்பார்.
முதன் முதலில் சு.ரா மேல் எரிச்சல் வந்தது. அது வரை சு.ரா சொன்ன எல்லாமும் உண்மை என்றே நினைப்பேன்.( பத்தாம் வகுப்புவரை பாலகுமாரன் எனக்கு அப்படி ). அன்று முதல் சு.ரா மேல் உள்ள விமர்சனம்தான் என்ன படிக்க ஆரம்பித்தேன்.
முதலி சாரு நிவேதிதா சு.ரா மேல் வைக்கும் விமர்சனம். சு.ரா ஒரு மத்தியதரமான எழுத்தாளர் என்று நிறைய சொல்லியிருப்பார். அது என்னை ரொம்ப ஈர்க்கவில்லை. ஆனால் “சு.ரா மேட்டிமைதனத்தில் உறையும் அற்பவாதம்” என்கிற கட்டுரை பிடித்திருந்தது.
அந்த கட்டுரையின் டிராபேக் என்னவென்றால் அதில் தெரியும் துவேசம். மற்றபடி அது நல்ல கட்டுரை.இப்படி சு.ரா மேல் ஒரு பேலன்ஸ் வந்தது.
ஒ.கே. அடுத்தது.
சாரு நிவேதிதா அருந்ததிராயின் ஆங்கிலத்தை விமர்சிக்கிறார். அருந்ததி தட்டையாய் எழுதிகிறார் என்கிறார். நான் பெரிய படிப்பாளி இல்லை என்றாலும் சாரு சொல்வது தவறு என்பது என்னளவில் பளிச்சென்று தெரிகிறது.
இவரின் ஆயிரக்கணக்கான வாசகர்களும் இப்படித்தானே நினைப்பார்கள். இப்போது வரை சாருவில் இருந்து தன்னை ஆரம்பிக்கிற வாசகன் சுந்தரராமசாமியின் அற்புத எழுத்துக்களை படிக்காமலேயே போய்விடுகிறானே ! ஜெ.ஜே சில குறிப்புகள் குப்பை என்று சொல்லி வா. மு கோமுவை சிலாகிக்கும் முட்டாள்களையும் சாரு போன்ற எழுத்தாளர்கள் அவர்களை அறியாமல் உருவாக்கி விடுகின்றனர்.
எஸ். ரா “காவல்கோட்டத்தை” ஆயிரம் பக்கம் அபத்தம் என்று அசால்ட்டாக சொல்லிவிடுகிறார். அதை படித்து நானும் முதலில் நம்பிவிட்டேன். பிற்பாடு அது பொய் என்று தெரிகிறது. அதற்கு சாருவேறு எஸ்.ரா வுக்கு சப்போர்ட்டு. ஏனென்றால் அப்போது சாருவும் எஸ்.ராவும் உயிர்மெய் குரூப்.( அப்போதெல்லாம் சாரு மனுக்ஷ்யபுத்திரனை அடிக்கடி சிலாகித்து எழுதுவார். இப்போது விட்டு விட்டார் ). பாஸ்கரதாஸ் நாள் குறிப்பை சாரு பால் கணக்கு புத்தகம் என்கிறார்.
அடுத்து மாமல்லன். மாமல்லனுடைய கட்டுரைகள் மேல் எனக்கு அலாதி காதல். ஆனால் அவர் சாருவின் நல்ல படைப்பான “எக்ஸைலை” வாசிக்கவே முடியவில்லை என்று சொல்ல ஏமாற்றம் வருகிறது. அது நல்லாயில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் வாசிக்கவே இல்லை என்று சொன்னால் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. என்னளவில் சாருவே வாசிப்பின்பத்தில் தமிழில் முதல் எழுத்தாளர் ( சுஜாதவையும் விட ). பிறகு ஏன் இந்த கமெண்ட் ? தெரியவில்லை.
ஜெயமோகன் நகுலனை பற்றி எழுதிய கட்டுரைகளை க்ஷேர் ஆட்டோவில் போகும் போது படித்து மன உளைச்சல் அடைந்தேன். நகுலனை அவர் திறமைக்கு அதிகமாக நாம் போற்றுகிறோமாம். அவர் எழுத்து மத்திய தரமானாதுதானாம். ஆனால் பூமணி, நாஞ்சில் நாடன் எல்லோரும் சூப்பராம்.
வி.எஸ் நெய்பால் பற்றி ஒருவர் கேட்டதற்கு, வி.எஸ் நெய்பால் எழுத்து சுவாரஸ்யமானது ஆனால் கருத்து துவேசமானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று வி.எஸ் நெய்பாலை பற்றி தவறான கருத்தை தன் வாசகர்களுக்கு தூவுகிறார்.அது போல் அருந்ததிராய் விசயத்திலும்.
இவர்கள் கருத்தையெல்லாம் பார்க்கும் போது இலக்கிய உலகில் அடியடுத்து வைக்கும் வாசகன் கவனமாக இருக்க வேண்டும் என்றே சொல்வேன்.
என்னுடைய கருத்து என்னவென்றால், எழுத்தாளர் ஒரு படைப்பை புகழும் போது அதை எடுத்து கொள்ளலாம்.
ஆனால் படைப்பை விமர்சிக்கும் போது அல்லது இகழும்போது அதை அப்படியே எடுத்துகொள்ளாதீர்கள்.
எழுத்தாளர் அப்படி சொல்வத்ற்கு பல பேராமீட்டர்ஸ் இருக்கிறது.
அவர் சொந்த விருப்பு வெறுப்பு, அவர் இருக்கும் வட்டம் அல்லது பதிப்பகம் ( காலச்சுவடு வெஸ் உயிர்மெய் ) மாதிரி, அவரின் அன்றைய மூட், அன்று நடக்கும் இலக்கிய அரசியல் ( உதாரணம் சாருவுக்கு மனுஸ்சுக்கும் ஒவ்வோமை நடந்த புதிதில், மனுஸ் அண்ணா நூலகத்தை மாற்றுவதை கண்டித்திருந்த போது, சாரு நிவேத்திதா அதை கிண்டல் செய்கிறார் ) என்று பல விசயம் உள்ளது. எழுத்தாளர்கள் இண்டெலக்ட் என்பதால் கருத்தை உருவாக்கி அதை சப்போர்ட் செய்யும் கலை அறிந்தவர்கள்.
வாசகர்களாகிய நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.
நீங்களே முன்கருத்தின்றி படைப்பை படிப்பதே புத்திசாலித்தனம்.
சுரா சொல்வதால் நா பார்த்தசாரதியையும்
சாரு சொல்வதால் சுந்தர ராமசாமியையும்
ஜெயமோகன் சொல்வதால் சாருவையும்
மாமல்லன் சொல்வதால் ஜெயமோகனையும்
வினவு சொல்வதால் சுஜாதவையும்
கீழாய் நினைக்க வேண்டாம்.
உனக்கான அன்னபறவைத்தனத்தை
நீயே தீர்மானம் செய்....